» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிரீன் காப்பர் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது : மீனவர் சங்கம் கோரிக்கை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 3:15:06 PM (IST)

மதிமுக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் நடத்தவுள்ள சுற்றுச்சூழல் பொதுக்கூட்டத்திற்குத் தகுந்த நிபந்தனைகள் விதிக்கக் கோரி, தூத்துக்குடி நாட்டுப்படகு இறால் மீன்பிடித் தொழிலாளர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் சந்தா பார்பர் மற்றும் செயலாளர் சம்சுதீன் தலைமையிலான மீனவப் பிரதிநிதிகள் அளித்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும் 'கிரீன் காப்பர்' திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் அரசியல் ரீதியாகப் பேசப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பொதுவெளியில் பேசி அரசியல் ஆக்குவது, மாவட்டத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துத் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும். சுற்றுச்சூழல் கவலைகளுக்காகத் தொழில்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் தீர்வு காண வேண்டும். ஏனெனில், இது ஆயிரக்கணக்கான மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கினாலும், நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விவகாரங்கள் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அரசியல் பேச்சுக்கள் பேசக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








