» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசுக்கு கோரிக்கை
திங்கள் 22, ஜூன் 2026 12:27:22 PM (IST)

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், பணி உத்தரவாதத்துடன் மாத ஊதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வலியுறுத்தியும் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 13,225 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் (WHV) கடந்த 5 ஆண்டுகளாக வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்துப் பெட்டகங்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் மாதம் 5,500 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஊக்கத்தொகையிலேயே பணியாற்றி வருகின்றனர்.
தொடக்கத்தில் 2 மணி நேரப் பணி என்று கூறி பணியமர்த்தப்பட்ட இந்த ஊழியர்கள், நடைமுறையில் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பணி செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில், தேசிய சுகாதாரக் குழும (NHM) ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டபோது, தமக்கும் சம்பள உயர்வு வழங்கக் கோரி ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மார்ச் 16 அன்று அன்றைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனினும், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்த ஊதிய உயர்வு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஊழியர்களின் குடும்பப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த 4 மாதங்களாக இவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் சங்கம் சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 2 அன்று அரசாணை எண் 340-இன் படி ஊதியம் வழங்குவதற்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் காசோலை அனுப்பப்பட்டது. ஆனால், 10 தினங்களுக்கு மேலாகியும் இன்னும் ஊழியர்களுக்குச் சம்பளம் போய்ச் சேரவில்லை.
எனவே, சம்பளப் பட்டுவாடாவைத் தாமதப்படுத்தும் மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஊழியர்கள் மீதான வேலைப்பளுவை உடனடியாகக் குறைக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் (DHO) எழுத்துப்பூர்வ உத்தரவு அனுப்ப வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)









BalaJun 23, 2026 - 04:19:57 PM | Posted IP 172.7*****