» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காரில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை : வாலிபர் கைது!
திங்கள் 22, ஜூன் 2026 10:44:11 AM (IST)
தூத்துக்குடியில் காரில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்குப் பிரையன்ட் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் பிரையன்ட் நகர் முதல் தெருவில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குச் சாலையோரமாகச் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணார் மூன்றாவது தெருவில் வசிக்கும் முத்துக்குமார் மகன் தருண் குமார் (21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரது காரைச் சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துத் தருண் குமாரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள கஞ்சா மொத்த வியாபாரி யார் என்பது குறித்தும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








