» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படுக்கையறையில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!

திங்கள் 22, ஜூன் 2026 10:40:02 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் சுடலை குமார் (35). கூலித் தொழிலாளியான இவருக்குக் கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி சுடலை குமாரின் மனைவி கோமதி, தனது மகனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். 

இதனால் சுடலை குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கோமதி கோவிலில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் சுடலை குமார் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுடலை குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வு மற்றும் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுடலை குமார் அதிகப்படியான மதுப் பழக்கத்தினால் இறந்தாரா அல்லது அவரது மரணத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்துத் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாப்பிள்ளையூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory