» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!
திங்கள் 22, ஜூன் 2026 7:55:50 AM (IST)
வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வேடநத்தம் மாணவியின் தந்தை சுப்புராஜ், இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள நபர் தரப்பிலிருந்து தங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் வருவதாகக் குளத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்!
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த காலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வேடநத்தம் மாணவி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும், ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தண்டனை பெற்றுள்ள மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரனின் தாயார், தனது வழக்கறிஞரின் துணையுடன் தூத்துக்குடியில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், நீதிமன்றத் தீர்ப்பையும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கடுமையாக விமரிசித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில், "இவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பையும், காவல் துறையையும் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தேவையற்ற வகையில் அச்சுறுத்தல்களும், நெருக்கடிகளும், மன உளைச்சல் ரீதியான தொந்தரவுகளும் தர்ம முனீஸ்வரன் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள எங்களுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் போது வழக்கறிஞர் தாஸ் உடனிருந்தார். இப்புகார் மனுவின் மீது குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








