» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திடீர் சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:23:31 PM (IST)

தூத்துக்குடியில் இன்று திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகப் போடப்பட்டிருந்த தற்காலிகத் தகர மேற்கூரை பறந்து வந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரெனப் பயங்கர வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அப்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையப் பணிகளுக்காகத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகர வீடுகளின் மேற்கூரைகள், காற்றின் வேகம் தாங்காமல் திடீரெனப் பெயர்ந்து காற்றில் பறந்து வந்தன. அவை அங்குள்ள 'பீடவுன்' பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தின.
இவ்விபத்தில் வடக்கு காலாங்கரையைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் மோகன்குமார், காலாங்கரையைச் சேர்ந்த முனியசாமி மகன் ஐயப்பன் ஆகிய வெல்டிங் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 'பீடவுன்' தீம் பார்க்கில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா தருவை எம்எஸ்பி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி ஆறுமுகத்தாய், அவரது மகள் ஆகாஷினி மற்றும் நெட்டூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ, அவரது மனைவி விரோனிகா ஆகியோரும் இவ்விபத்தில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.
தற்போது அவர்கள் 6 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








