» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரோட்டரி சங்க உறுப்பினராக அமைச்சர் ஸ்ரீநாத் இணைந்தார்!
ஞாயிறு 21, ஜூன் 2026 7:53:11 PM (IST)

தூத்துக்குடியில் ரோட்டரி விருது வழங்கும் விழாவில், அமைச்சர் ஸ்ரீநாத் ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்தார்.
தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் ரோட்டரி சங்கத்தின் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரோட்டரி ஆளுநர் தினேஷ் பாபு, ஜோ பிண்டோ வில்லவராயர், ஜோ பிரகாஷ் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தொழிலதிபரும் முன்னாள் ரோட்டரி ஆளுநருமான ஜோ சேசையா வில்லவராயர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கானப் படிவங்களை வழங்கி, அவரைச் சங்கத்தில் இணைத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் ரோட்டரி ஆளுநர் சேசையா வில்லவராயர் ஒரு முக்கியப் புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துகொண்டார். "தற்போதைய தமிழக சட்டசபையில் மொத்தம் 27 ரோட்டரி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இதில் ஏற்கனவே 5 ரோட்டரி உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது இணைந்துள்ள அமைச்சர் ஸ்ரீநாத்தையும் சேர்த்து மொத்தம் 6 பேர் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளனர். இதன் மூலம் தற்போதைய சட்டசபையில் 10 விழுக்காடு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மட்டுமன்றி நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








