» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழை முன்னெச்சரிக்கை: மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரம்!

ஞாயிறு 21, ஜூன் 2026 7:46:11 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களில் சாலைத் துண்டிப்பு மற்றும் கிராமப்புற பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் 1,000 மணல் மூட்டைகள் மற்றும் அவசரக் கால மீட்பு உபகரணங்களைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்துத் துண்டிக்கப்படுவதுடன் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை அதிகளவில் தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வுத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆலோசனையின் பேரில், திருச்செந்தூர் உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவசரக் காலங்களில் உடைப்புகளை அடைப்பதற்காகப் முதற்கட்டமாக 1,000 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், மழைக் காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அவற்றை அகற்றுவதற்குத் தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் தடையற்ற மின்சாரப் பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர்களைச் சரிசெய்து தயார் நிலையில் வைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

திருச்செந்தூர் உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி இந்த முன்னெச்சரிக்கை ஆயத்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பரமசிவன், உதவி பொறியாளர் நாகராஜா மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரமேஷ், ராணி, வசந்தி, விமலா ஆகியோர் உடனிருந்தனர். பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து எடுத்து வரும் இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory