» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை

ஞாயிறு 21, ஜூன் 2026 1:11:21 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும், மழைவளம், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில்வளம் சிறக்கவும், பாதுகாப்பான பட்டாசு தொழில் வேண்டியும், கல்வி அறிவு மேலாங்கவும், வேலைவாய்ப்பு பெருக வேண்டியும் மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான மகளிர் 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து  ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப்பணியாக வேஷ்டி, சேலைகளை மன்ற தலைவர் ஆர்த்தி வழங்கினார்.



ஓம்சக்தி கொடியை மின்பாதை ஆய்வாளர் பண்டார முருகன் ஏற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.  விழாவில்,  தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம்,  பொறுப்பாளர்கள் பேச்சியம்மாள், லலிதா, சிங்கராஜ், அழகர்சாமி, உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory