» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சர்வதேச யோகா தினம்: என்.சி.சி மாணவியர் பங்கேற்பு!

ஞாயிறு 21, ஜூன் 2026 9:30:03 AM (IST)



தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் நெல்லை 3 தமிழ்நாடு மகளிர் பட்டாலியன் என்.சி.சி வழிகாட்டுதலின்படி, ஐந்து கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி 3 தமிழ்நாடு மகளிர் பட்டாலியன் என்.சி.சி கட்டளை அதிகாரி அமித் கண்டாரி வழிகாட்டுதலின்படி, ஐந்து கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த ஆரோக்கிய வாழ்வியல் நிகழ்ச்சியை நடத்தினின.

இச்சிறப்பு யோகா நிகழ்வில் ஏபிசி மகாலட்சுமி கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, புனித அலோசியஸ் மாணவியர் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளி ஆகிய ஐந்து கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 224 என்.சி.சி மாணவியர் தங்களின் சீருடையுடன் மிகவும் உற்சாகமாகக் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர் அபிநயா கலந்துகொண்டு மாணவிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினார். அவர் மாணவிகளுக்குச் சூர்யா நமஸ்காரம், பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியான முறைகளை செயல்முறை விளக்கம் மூலம் கற்றுக்கொடுத்தார். மேலும், தற்போதைய நவீன காலகட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா எவ்வாறு துணைபுரிகிறது என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளிடையே விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த யோகா தினக் கொண்டாட்ட நிகழ்வில், இணை என்.சி.சி அதிகாரிகளான முத்துக்கனி, மேரி பிரியா, லொலிட்டா ஜூட், கிறிஸ்டினா ரேகா முறாயிஸ் மற்றும் அல்பினாமேரி ஆகியோர் நேரில் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

உடல், மனம் மற்றும் ஆன்ம நலனை மேம்படுத்தும் யோகாவின் அவசியத்தை இளம்பருவத்திலேயே உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, மாணவிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலை வலியுறுத்தும் சிறப்பான களமாக அமைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory