» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது; 4 பைக்குகள் பறிமுதல்!
சனி 20, ஜூன் 2026 9:18:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 950 கிராம் கஞ்சா, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் பொருட்டும், விற்பனையாளர்களைக் கைது செய்யும் பொருட்டும் மாவட்டக் காவல் துறை தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று, மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ் குமார் (19). வ.உ.சி காலனி பகுதியைச் சேர்ந்த ராசுக்குட்டி மகன் அறிவுமதி என்ற அழகு (23). அதே பகுதியைச் சேர்ந்த பாஸ் என்ற பாலமுருகன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 600 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
குரும்பூர் நாலுமாவடியில் 2 பேர் கைது:

இதேபோல், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமாவடி பகுதியில் இன்று குரும்பூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மம்முது தலைமையில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் கஞ்சா வைத்திருந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (28) மற்றும் அலேக்காபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (20) ஆகிய 2 பேரைச் சார்பு ஆய்வாளர் மம்முது வழக்கு பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தார். அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








