» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு: நெல்லை சரக காவல் ஆய்வாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!
சனி 20, ஜூன் 2026 8:04:26 PM (IST)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அதுசார்ந்த வழக்குகளைத் திறம்படக் கையாளுவதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு இன்று (20.06.2026) தூத்துக்குடி மாவட்டம் பேரூர்ணியில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளியில் வைத்துத் தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 20 அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணித்து மேற்பார்வையிடும் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 24 உயர் காவல் அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இச்சிறப்புப் பயிற்சி வகுப்பினைத் திருநெல்வேலி காவல் சரகத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் தொடங்கி வைத்தார்.
பேரூர்ணி காவல் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் இந்த வகுப்புகளில், அரசுச் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளையும் சட்ட விதிகளையும் விளக்கி விரிவான பயிற்சி அளித்தனர்.
குறிப்பாக: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சட்டரீதியாகக் கையாளுவது எங்ஙனம்?
குற்றங்கள் குறித்த வழக்கு புலன் விசாரணைகளை (Investigation) எவ்வாறு திறம்படவும் விரைவாகவும் மேற்கொள்வது?
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அரசு நிவாரணத் தொகைகளை முறைப்படி பெற்று வழங்குவது எப்படி?
போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி வகுப்பின் நிறைவாக, இதில் கலந்துகொண்ட அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி பேரூர்ணி காவல் பயிற்சிப் பள்ளி முதல்வர் நாகராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி சரக பணியிடை பயிற்சி மையப் பொறுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








