» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கே. சின்னத்துரை அன் கோ சார்பில் பறக்கலாம் மிதக்கலாம் மெகா சலுகை: வாடிக்கையாளர்கள் பயணம் துவக்கம்!
சனி 20, ஜூன் 2026 8:36:57 AM (IST)

கே. சின்னத்துரை அன் கோ சார்பில், "பறக்கலாம் மிதக்கலாம்" என்ற சிறப்பு மெகா சலுகைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் சொகுசுக் கப்பல் பயணத்திற்காகத் தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனமான கே. சின்னத்துரை அன் கோ ஜவுளி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக "பறக்கலாம் மிதக்கலாம்" என்ற மெகா சலுகைத் திட்டத்தினை அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின்படி, நிறுவனத்தின் கிளைகளில் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விமானம் மற்றும் சொகுசுக் கப்பலில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக, ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களில் இருந்து 90 பேர் சிறப்பு சொகுசுக் கப்பல் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இந்த 90 வாடிக்கையாளர்களும் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள சின்னத்துரை அன் கோ ஜவுளி நிறுவன வளாகத்தில் இருந்து தனியார் சொகுசு ஆம்னி பேருந்து மூலமாகப் பயண இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இன்று மாலை கடல் சுற்றுலாவிற்காகச் சிறப்புச் சொகுசுக் கப்பலில் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர்.
இதுகுறித்து ஜவுளி நிறுவன நிர்வாகத்தினர் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமான ஆடைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களது நீண்ட நாள் கனவுப் பயணத்தை நனவாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவே இந்தச் சலுகையை அறிவித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.
தற்போது இந்த மெகா சலுகைத் திட்டமானது தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய அனைத்துக் கிளைகளிலும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பட்டு, ஜவுளி மற்றும் தங்கம் என அனைத்துப் பிரிவுகளிலும் புதிய ரக ஆடைகளும் ஆபரணங்களும் வாடிக்கையாளர்களுக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுற்றுலாப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவன பங்குதாரர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிரிஷ்ணன், நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








