» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீட் அன்ட் ஈட் புதிய ரெஸ்டாரண்ட்டின் புதிய கிளை திறப்பு விழா!
வெள்ளி 19, ஜூன் 2026 9:51:52 PM (IST)

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3ஆம் மைல் பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 'மீட் அன்ட் ஈட்' ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டின் 2-வது கிளையை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3ஆம் மைல் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு எதிரே மருத்துவர்கள் சிவக்குமார் ராமதாஸ், புவனேஸ்வரி சண்முகநாதன் ஆகியோர் இணைந்து 'மீட் அன்ட் ஈட்' ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டின் 2-வது புதிய கிளையை நிறுவியுள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி புதிய உணவகக் கிளையைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ராஜேஸ்வரி ராம்தாஸ், ஆஷா சண்முகநாதன், மருத்துவர்கள் புவனேஸ்வரி சண்முகநாதன், தமிழரசி சண்முகநாதன், பொன்னரசி சண்முகநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி உணவகத்தின் வணிகத்தைத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சஞ்சித் ராம்தாஸ் மற்றும் தருண் ராம்தாஸ் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்றனர்.
இவ்விழாவில் தொழிலதிபர்கள் பிரபு ராம்தாஸ், அருண் ராம்தாஸ், மருத்துவர் பிரவீன், தியாகராஜன், உடன்குடி ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அதிமுக முக்கியப் பிரமுகர்களான மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்டப் பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய் கணேஷ், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள் பிரபாகர், பில்லா விக்னேஷ், தனராஜ், வர்த்தக அணிப் பொருளாளர் சுகுமார், ஐடி விங் சொக்கலிங்கம், சகாய ராஜா, பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த், உதயா ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் உள்ளூர் வியாபாரப் பெருமக்கள் ஜெயபால், மாரிமுத்து, பெத்துராஜ், பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா காளிமுத்து, மோகன்ராம், செல்லத்துரை உட்படப் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு புதிய உணவகக் கிளைக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








