» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 8:32:08 PM (IST)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களைப் போலீசார் இன்று தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவர் மீது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவர்களின் தொடர் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்களைத் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று சங்கர் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் முறைப்படி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








