» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் சமையல் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் 44 தொகுப்புச் சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்ற முயலும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகப் பொதுமக்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மாநகரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், சமையல் சிலிண்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து சிபிஎம் கட்சியினர் தங்களது கண்டனத்தை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.
மாநகரக் குழு உறுப்பினர் எஸ். நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இனிதா, ஆனந்த், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, கிளைச் செயலாளர்கள் வயணப்பெருமாள், மனோகரன், ஆறுமுகம், சசிகுமார் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








