» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)
தூத்துக்குடி அருகே நள்ளிரவில், மர்ம நபர்கள் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கப் பணம் மற்றும் மிட்டாய் பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (44). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் இருந்த 1,500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் பாக்ஸ்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கிருந்து 300 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 1,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்நாக்ஸ் மற்றும் திண்பண்டங்களைத் திருடியுள்ளனர்.
அதே நள்ளிரவில், கூட்டாம்புளியைச் சேர்ந்த ஆத்திமுத்து (45) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம கும்பல் உடைத்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் இருந்து எந்தப் பொருட்களும், பணமும் திருடப்படவில்லை. பூட்டு மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் கொள்ளை முயற்சி அளவோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை கடைகளைத் திறக்க வந்த உரிமையாளர்கள், பூட்டுகள் உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்து, தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








