» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி ஆணையாளர் செல்வி மா.சுகந்தி அறிவுறுத்தலின்படியும், பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர்பாஸ்கரன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களான செல்வம், செந்தில்குமார், கண்ணன், ரவிமாணிக்கம், திரு. பொன் ராமலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் இன்று "உலக குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம்” இன்று பள்ளி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வை பள்ளி முதல்வர்பிரபு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு, ஊரணித் தெரு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லலிதா மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையின் தீமைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றப்பட்டது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. "குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது வறுமைக்கு தீர்வாகாது. கல்வி மட்டுமே அவர்களின் வாழ்கையை உயர்தும் ஆயுதம்” என்று வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் "குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம், கல்வியைப் போற்றுவோம்” என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் அனைவரும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியர்கள் இந்துமதி, உமாராணி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் கோவில்பட்டி நகராட்சி தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் காளிராஜ், மாலதி, முத்துமாரி, கவிதா, பள்ளி ஆசிரியர்கள் மாரிச்சாமி, ஸ்ரீதரன், ரேகா, மகாலட்சுமி, சண்முகத்தாய், முருகேசன், உமா சங்கரி மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை மாணவிகள் அனுஜா மற்றும் தாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

பத்திரிகையாளர்களை அடிக்கப் பாய்ந்த ஏடிஎஸ்பி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திங்கள் 20, ஜூலை 2026 9:56:33 PM (IST)

கோவில்பட்டி "இது எங்கள் பூமி" விவசாய கதை ஆசிரியர் கோ. சுரேஷ்குமாருக்கு பாராட்டு விழா!
திங்கள் 20, ஜூலை 2026 9:54:37 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)








