» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” வாகனங்களை திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் வாகனங்கள் மற்றும் செயல்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இவ்ஆய்வின் போது, திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உடனிருந்து, அதிரடிப்படைப் பிரிவினருக்குப் பாதுகாப்புப் பணிகள் குறித்தப் பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
மாவட்டத்தில் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








