» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவர் பணிகளுக்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட 10-ஆம் வகுப்பு (SSLC) அல்லது அதற்கு நிகரான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலையில்லாத இளைஞர்கள், சுயதொழில் செய்யும் நபர்கள், முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீடு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் கிராம சபை உறுப்பினர்கள் ஆகியோர் இம்முகவர் பணிக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் முறையான நேர்முகத் தேர்வு (Interview) மூலமாக மட்டுமே முகவர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு நிலையான மாதச் சம்பளம் எதுவும் கிடையாது; மாறாக, அவர்கள் எடுக்கும் காப்பீட்டுப் பாலிசிகளின் பிரீமியம் தொகையின் அடிப்படையில் உரிய ஊக்கத்தொகை (Commission) மட்டுமே வழங்கப்படும்.
இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் முகவர்கள் அனைவரும் ரூ.5,000-த்தை (ஐந்தாயிரம் ரூபாய்) பாதுகாப்பு வைப்புத் தொகையாக (Security Deposit) தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரம் (KVP) வடிவில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட முகவர்களின் முகவாண்மைக் காலம் (Agency Period) நிறைவடையும் போது, இந்த வைப்புத் தொகையானது உரிய வட்டியுடன் விண்ணப்பதாரருக்குத் திருப்பி வழங்கப்படும்.
இப்பணிக்கான விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் (30.06.2026) அருகிலுள்ள அஞ்சலகங்களிலோ அல்லது "அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628501" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என கோவில்பட்டி கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

பத்திரிகையாளர்களை அடிக்கப் பாய்ந்த ஏடிஎஸ்பி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திங்கள் 20, ஜூலை 2026 9:56:33 PM (IST)

கோவில்பட்டி "இது எங்கள் பூமி" விவசாய கதை ஆசிரியர் கோ. சுரேஷ்குமாருக்கு பாராட்டு விழா!
திங்கள் 20, ஜூலை 2026 9:54:37 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)








