» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!
வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல ஆண்டுகளாக என்டிபிஎல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்பின் மூலம் நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் உயர்தரச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முடநீக்கியல், மகப்பேறு, மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறைகளுக்கு ஏராளமான நவீன உபகரணங்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் செமினார் அறை மற்றும் விரிவுரையாளர் அறை ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக என்டிபிஎல் நிறுவனம் சார்பில் ரூ.1.02 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3 கோடியே 19 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (மே 21) காலை நடைபெற்ற விழாவில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் என்டிபிஎல் நிர்வாகத்தால் மருத்துவக் கல்லூரிக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் என்டிபிஎல் நிறுவன சிஇஓ அரவிந்த ராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மநாபன், துணை முதல்வர் கலைவாணி, ஆர்.எம்.ஓ, நிலைய மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெயமணி, முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பாவலன், முன்னாள் முதல்வர் சிவகுமார், துணை நிருவாகி குமரன், சிஇஓ ஆனந்தராமானுஜம் மற்றும் என்டிபிஎல் சிஎஸ்ஆர் நோடல் அதிகாரி ரகுபதி, அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









