» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)



பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1983ம் ஆண்டு 65 மாணவர்கள் பிளஸ் 2 படித்தனர். அப்போது படித்த பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். 

ஸ்ரீ கணேசர் பள்ளிகள் செயலாளர் முருகன், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பள்ளி செயலாளரும், முன்னாள் மாணவருமான செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் ராஜகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னாள் ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவரும், சென்னைவாழ் பணிக்கநாடார்குடியிருப்பு நலச்சங்க செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர், ஆங்கிலப்பள்ளி முதல்வர் மௌலாதேவி, ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை தலைமையாசிரியர் சுரேஷ் காமராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கிருஷ்ணக்குமார், சந்திரசேகர், கண்ணன்பிரபு, சரவணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory