» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)
தூத்துக்குடி அருகே கோடை வெப்பம் காரணமாக வீட்டின் வெளிமுற்றத்தில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண், விஷப் பாம்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அல்லிக்குளம், மேற்குத் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி பஞ்சவர்ணம் (47). தற்போது அக்னி வெயிலின் தாக்கம் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக, பஞ்சவர்ணம் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே உள்ள வெளிமுற்றத்தில் தரையில் பாய் விரித்துப் படுத்து உறங்கியுள்ளார். அப்போது ஒரு விஷப் பாம்பு, பஞ்சவர்ணத்தின் வலது தோள்பட்டைப் பகுதியில் கடித்துள்ளது.
பாம்பு கடித்த வேதனையில் அவர் அலறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பஞ்சவர்ணம் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் அதிகாரிகள் அராஜகம்: சிஐடியு முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை!
ஞாயிறு 24, மே 2026 11:37:41 AM (IST)










