» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு விழா கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் எம்.எஸ்.எம்.ஆர். எஸ். ரமேஷ் வழிகாட்டுதலின்படி உப தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் எஸ்.ஆர் ஜெயபாலன், சங்க பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிச் செயலாளர் அட்வகெட் செல்வம், பள்ளி பொருளாளர் பாஸ்கரன் பள்ளிக்குழு உறுப்பினர்கள் செல்வம் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எஸ்எஸ்டிஎம் கல்லூரி செயலாளர் சுமி கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு எஸ்எஸ்டிஎம் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு நினைவுப்பரிசுள் வழங்கினார்.
பள்ளி அளவில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர் சூரிய பிரகாஷ் இரண்டாம் இடம் 482 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் அனுஜா மற்றும் வினேகா, 478 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடத்த மாணவர் சண்முகராஜா ஆகியோருக்கு உறவின்முறை சார்பாகவும், பள்ளி குழு சார்பாகவும், பள்ளியில் சார்பாகவும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இதுபோல் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 14 மாணவர்களுக்கும், பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 400 மதிப்பெண்கள்வரை பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி அனைவரையும் பாராட்டினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் அலுவலர்கள் பெற்றோர்கள் மாணவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









