» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!
வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகர், 12-ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த பூபால் ராஜா என்பவரது மனைவி அமுதா (50). பூபால் ராஜா ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில், இம்பதியினர் தங்களது வீட்டின் முன்பாகப் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் அருண்குமார், தனது மனைவி சரஸ்வதி (29) மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
அருண்குமார் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே வழக்கம் போல் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த அமுதா தனது மகனான அருண்குமாருக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இதனால் மருமகள் தரப்பிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை அமுதா வழக்கம் போல் தனது மளிகைக் கடையில் வியாபாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அமுதாவைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையின்படி, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அருண்குமாரின் மனைவி சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதா சிகிச்சை பலபின்றி இறந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, சங்கர் மற்றும் அவரது நண்பர் மதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









