» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சி.எஸ். நரேந்திரன் காலமானார்
புதன் 29, ஏப்ரல் 2026 3:11:53 PM (IST)
புகழ்பெற்ற இதய நோய் சிறப்பு நிபுணரான டாக்டர் சி.எஸ். நரேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
தூத்துக்குடியில், புகழ்பெற்ற இதய நோய் சிறப்பு நிபுணரான டாக்டர் சி.எஸ். நரேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. டாக்டர் நரேந்திரன், மருத்துவத் துறையில் பல தசாப்தங்களாகத் தொண்டாற்றியவர். ஆயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த பெருமைக்குரியவர்.
இவரது கனிவான அணுகுமுறையும், மருத்துவ நுணுக்கங்களும் சக மருத்துவர்களாலும் நோயாளிகளாலும் என்றும் போற்றப்படுபவை. மறைந்த டாக்டர் நரேந்திரன் உடல், இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நாளை 30.04.2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் டூவிபுரம், 5வது தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது.
டாக்டர் சி.எஸ். நரேந்திரன் மறைவு மருத்துவத் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மருத்துவத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
THAMILANApr 29, 2026 - 06:07:42 PM | Posted IP 104.2*****
மனித நேயமுள்ள நல்ல மருத்துவர். அதிகம் பணத்திற்கு ஆசை படாத மாமனிதர் ஆழ்ந்த இரங்கல்.
சங்கரன்Apr 29, 2026 - 05:13:47 PM | Posted IP 162.1*****
ஆழ்ந்த இரங்கல்
D.THIRUMALAI KUMAR.Apr 29, 2026 - 05:00:46 PM | Posted IP 172.7*****
Very good doctor. Great loss
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
சனி 2, மே 2026 4:27:08 PM (IST)

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)










C ThirunavukkarasuApr 30, 2026 - 08:57:46 AM | Posted IP 172.7*****