» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்பகுதியில், இன்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, கடலில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக, ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும், அதற்கு முன்னும் பின்னும் வரும் நாட்களிலும் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இங்கு இயற்கையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்குத் தண்ணீர் உள்வாங்கியது. இதனால், எப்போதும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
கடல் உள்வாங்கியதைக் கண்டு பக்தர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், எனினும் பாறைகள் வெளியே தெரிவதால் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பான பகுதிகளில் மட்டும் நீராடுமாறும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கடற்கரை ஓரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)

தூத்துக்குடியில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி - முகவர்கள் தவிப்பு!
சனி 2, மே 2026 9:01:07 AM (IST)









