» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

சனி 2, மே 2026 10:31:51 AM (IST)

கயத்தாறு அருகே தீராத வயிற்று வலி காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு இலந்தைகுளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சேதுத்தாய் (66). இவர் தனது பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில காலமாக சேதுத்தாய் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டும் வலி குறையாததால் மனமுடைந்த சேதுத்தாய், கடந்த 30.04.2026 அன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீராத உடல்நலக் குறைவால் மூதாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory