» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)
தென்னகத்தில் 'தாமிரபரணி அகோபிலம்' என்று போற்றப்படும் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், நரசிம்ம ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் லட்சுமி நரசிம்மருக்கெனத் தனியாக அமைந்துள்ள ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்று என்பதால், இத்தலம் ஆன்மீக ரீதியாக மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சில காலங்களாகப் போதிய வழிபாடுகள் இன்றி இருந்த இந்த ஆலயத்தில், தற்போது லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா சார்பில் சுவாமிக்கு நித்திய பூஜைகளும், பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு ஹோமம் மற்றும் பகவானுக்கு நீராஞ்சன பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் பிரம்மாண்ட ராம விநாயகர் வீரபாண்டீஸ்வரர் சிவகாமி அம்பாள் பைரவர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்குச் சிறப்பு கோஷ்டி வழிபாடுகள் முறைப்படி நடத்தப்பட்டன.
விழாவில் லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபாவின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சேஷப்பன், வள்ளிநாயகம் மற்றும் குணவதியம்மன் கமிட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் உட்படத் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை வெங்கடாச்சாரி வாத்தியார், அனந்த ராம அய்யங்கார், சேகர் கம்பர் உள்ளிட்ட அர்ச்சகர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
சனி 2, மே 2026 4:27:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)









