» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதியதில் கேட் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மைசூரில் இருந்து நேற்று இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மீள விட்டான்ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த ரயில் 4வது ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடிக்கொண்டிருக்கும்போது அந்த வழியாக வேகமாக வந்த லோடு வேன் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது அதற்குள் ரயில்வே கேட் மூடிவிட்டது.
இதனால் லோடு வேன் ரயில்வே கேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரயில்வே கேட் முற்றிலும் சேதமானது. இதனால் நான்காம் ரயில்வே கேட் வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் இருந்த ரயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசார் சமூக இடத்துக்குச் சென்று அந்த லோடு வேன் டிரைவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும், பழுதான ரயில்வே கேட்டை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுமார் மூன்று மணி நேரமாக நான்காம் ரயில்வே கேட்டு வழியாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் வழியாக செல்வதால் அந்தப் பகுதியிலும் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)









BabuApr 27, 2026 - 08:47:15 AM | Posted IP 104.2*****