» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு

திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

ஆறுமுகநேரியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுர‌த்தில் வசிப்பவர் உத்திரம் இவரது மகன் அருள் முத்து (22). மது போதைக்கு அடிமையானவர் இவர் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ஆறுமுகநேரிலிருந்து காயல்பட்டணம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கி விட்டாராம். 

சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை ஆறுமுகநேரி காயல்பட்டினத்தை கடந்து சென்ற போது தண்டவாளத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த அருள் முத்து மீது ஏறி இறங்கியதில் அவரது உடல் முழுவதும் துண்டு துண்டாக வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory