» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா

திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)



தூத்துக்குடி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.
 
தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவையின் 283வது நிகழ்வு நடைபெற்றது. காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு துரை கணேசன் தலைமை வகித்தார். கருவூலத்துறை பணி நிறைவு அலுவலர் ஆதி அருமைநாயகம் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஹரிதாஸ் பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பாவேந்தரின் புரட்சி பாடல்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் பிரபு அப்பாசாமி சிறப்புரையாற்றினார். புதுமைப்பித்தனின் படைப்பு உலகம் என்ற தலைப்பில் இலக்கியச் செம்மல் சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். நிறைவாக பூபால் செல்லையா நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory