» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)
கயத்தார் அருகே கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்தவர் குமரேசன் இவரது மகன் கணேசன் (32). பாளையங்கோட்டை செஞ்சி காலணியில் வசிப்பவர் மோகன் இவரது மகள் ஐஸ்வர்யா (27). இவர்கள் 2 பேரும் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் காரில் திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரி செல்வம் வயது 29 என்பவர் ஓட்டி வந்தார்.
மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் கயத்தார் அருகே உள்ள ராஜா புதுக்குடி ஹோட்டல் அருகே வரும்போது கார் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதில் டிரைவர் மாரிசெல்வம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த கணேசன் மற்றும் ஐஸ்வர்யா இரண்டு பேரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு: முகமூடி ஆசாமி கைவரிசை - போலீஸ் விசாரணை!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:06 AM (IST)








