» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு: விளாத்திகுளம் தொகுதி முதலிடம்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 3:31:00 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதங்கள் வெளியாகியுள்ளன.

மதியம் 1 மணி நிலவரம்: மாவட்டத்தில் சராசரியாக 52% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி பெயர் வாக்குப்பதிவு சதவீதம்

விளாத்திகுளம் 54.89% (முதலிடம்)

தூத்துக்குடி 54.08%

கோவில்பட்டி 52.66%

திருச்செந்தூர் 51.29%

ஸ்ரீவைகுண்டம் 51.26%

ஓட்டப்பிடாரம் 51.24%

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 54.89% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் 51% என்ற அளவில் சமமான வேகத்தில் வாக்குப்பதிவை முன்னெடுத்து வருகின்றன. வெயில் தாக்கம் சற்றே குறைந்த பிறகு, மாலை நேரத்தில் வாக்காளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என தேர்தல் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory