» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை; தூத்துக்குடியில் பரிதாபம்

வியாழன் 23, ஏப்ரல் 2026 12:18:51 PM (IST)

தூத்துக்குடியில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்துள்ள முள்ளக்காடு, நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயராம் (67). உப்பளத் தொழிலாளியான இவர், தனது மகன் பிரபாகரனுடன் வசித்து வந்தார். ஜெயராமனின் மனைவி விஜயகுமாரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

மனைவியின் மறைவிற்குப் பிறகு ஜெயராம் கடும் மன உழைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் அவர் வீட்டின் மாடிக்குச் சென்று தூங்குவதாகக் கூறிவிட்டுச் சென்றார். மாலை நேரத்தில் அவரது மகன் மாடிக்குச் சென்று பார்த்தபோது, ஜெயராம் அங்குள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் நார் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டபோது, ஜெயராம் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், ஜெயராமின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory