» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

புதன் 1, ஏப்ரல் 2026 8:39:16 PM (IST)

கடம்பூர் அருகே மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 62 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடம்பூரைச் சேர்ந்த சேர்மராஜ் (62) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சேர்மராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசீத்குமார் இன்று (01.04.2026), சேர்மராஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என உறுதி செய்தார். அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஜுகுமார், வழக்கைத் திறம்படப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் (தற்போது ஆய்வாளர்) அன்னலட்சுமி, அரசுத் தரப்பில் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ராதிகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory