» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா
புதன் 1, ஏப்ரல் 2026 8:01:50 PM (IST)

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனாரை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 23ம் தேதி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து விழாவின் 6ம் நாளான மார்ச் 28ம் தேதி மகா அன்னதானம் நடந்தது. இதனைத்தொடர்ந்து 10ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 1 மணிக்கு உற்சவ அய்யனார் கற்பக பொற்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரகுருபரன், வினோபால், செல்வராஜ், அசோகராஜ், சரவணன், ராமகிருஷ்ணமுத்து, சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:39:16 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:09:15 PM (IST)

பஜ்ஜி போட்டு நூதன பிரச்சாரம்: தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத்திற்கு உற்சாக வரவேற்பு!
புதன் 1, ஏப்ரல் 2026 5:43:19 PM (IST)

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:54:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில ரூ.60.37 லட்சம் ரொக்கம்; ரூ.3.83 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:20:42 PM (IST)







