» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில ரூ.60.37 லட்சம் ரொக்கம்; ரூ.3.83 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:20:42 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 60.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று (01.04.2026) வரை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 60,37,330 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.3,83,714/- மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனையின் போது பிடிபட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 6,65,600/- ஆகும். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஜ்ஜி போட்டு நூதன பிரச்சாரம்: தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத்திற்கு உற்சாக வரவேற்பு!
புதன் 1, ஏப்ரல் 2026 5:43:19 PM (IST)

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:54:02 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!
புதன் 1, ஏப்ரல் 2026 3:49:42 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)







