» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

புதன் 1, ஏப்ரல் 2026 4:54:02 PM (IST)

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. காலை 6:30 மணியளவில், வள்ளி அம்பாள் தபசுக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.

இன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பாக, சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி கோலாகலமாகத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory