» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் ரா.ரமேஷ் போட்டி: புதிய தமிழகம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல்!

புதன் 1, ஏப்ரல் 2026 12:36:42 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக ரா. ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி, தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக கூட்டணியில் இருந்து விலகி, 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முதற்கட்டமாக 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (31.03.2026) கோவை குனியமுத்தூர் 'பொதிகை' இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், எஞ்சிய 27 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

இதில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக ரா. ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் புதிய தமிழகம் கட்சி அறிவித்தபடி மொத்தம் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory