» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்

புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

கோவில்பட்டியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை தினத்தில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையைப் பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க, கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மீகா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் காந்தி நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது, சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர். காந்தி நகர் காளியம்மன் கோவில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாள் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

காந்தி நகர் பகுதியில் மது விற்ற சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மொத்தம் 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory