» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)
தூத்துக்குடி அருகே வீட்டில் வளர்த்த நாய் கடித்ததில், 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த பின்னலாடைத் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயம் ஏற்பட்டவுடன் மாணவி முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவில்லை என்றும், 'ரேபிஸ்'தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்ததன் மூலம் ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு சார்பிலேயே மாணவியின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் ரா.ரமேஷ் போட்டி: புதிய தமிழகம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல்!
புதன் 1, ஏப்ரல் 2026 12:36:42 PM (IST)

தூத்துக்குடியில் கம்பால் தாக்கி ஒருவர் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 12:16:00 PM (IST)

விளாத்திகுளத்தில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் : அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரை
புதன் 1, ஏப்ரல் 2026 11:36:05 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)







