» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப சாவு

திங்கள் 30, மார்ச் 2026 4:57:41 PM (IST)



தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் டேவிஸ்புரம் ரோட்டில் வசிப்பவர் ஐயம்பெருமாள். இவரது மகன் நட்டார் (30). இவர் தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை 11:30 மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்காக தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோடு ஜோதி நகர் அருகே ரோட்டை கடந்து ஆடுகள் சென்ற போது துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றுக் கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி ஆடுகள் மீது சரமரியாக மோதியது.

இதில், 26 ஆடுகள் துடி, துடித்து இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தன. மேலும், 20க்கு மேற்பட்ட ஆடுகள் சிறு காயத்துடன் உயிர் தப்பியது. பின்னர், லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஆட்டின் உரிமையாளர் மற்றும் சங்கர பேரி பொதுமக்கள் நடுரோட்டில் கூட்டமாக நின்றனர். 

இது குறித்து, தகவல் அறிந்த சிப்காட் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெபின் செல்வபிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நடுரோட்டில் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று லாரியை ஓட்டி வந்த டிரைவர் யார்? அதன் உரிமையாளர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory