» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!

திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST)

தூத்துக்குடியில் தகராறில், தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய நபரைத் தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜூ (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கும், ராஜூவிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணபிரான், சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து ராஜூவின் மோட்டார் சைக்கிள் மீது வீசினார். இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து ராஜூ அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றத்திற்காகக் கண்ணபிரானைப் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory