» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்

திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 30ம் தேதி துவங்கியது. இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான பிரபுவிடம் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்செந்தூர் வெள்ளாளன் விலையை சேர்ந்த ராஜசேகர் மகன் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.



இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி நிறுவனர் தொழிலதிபர் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் டி.பி.எஸ்.பொன்குமரன் தேர்தல் அதிகாரி  பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அக் கட்சியின் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர் 
 
தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த முருகன் விநாயகம் மகன் ஸ்ரீகாந்த் என்பவர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
இன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மூன்று பேர் வேட்பு மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று 31 ஆம் தேதியும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது ஏப்ரல் 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory