» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட எஸ்பி மதன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், எப்போதும்வென்றான் பகுதியில் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குளத்தூர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜ் (28) மற்றும் அழகுராஜ் மகன் ஜெகதீஷ் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப சாவு
திங்கள் 30, மார்ச் 2026 4:57:41 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்
திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST)

சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை: இந்து முன்னணி
திங்கள் 30, மார்ச் 2026 2:32:55 PM (IST)

தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST)

பூட்டிய வீட்டுக்குள் விவசாயி சடலம்: தற்கொலைக்குத் தூண்டியதாக கடிதம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:07:20 AM (IST)

நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி!
திங்கள் 30, மார்ச் 2026 9:00:27 AM (IST)







