» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை: இந்து முன்னணி
திங்கள் 30, மார்ச் 2026 2:32:55 PM (IST)
தூத்துக்குடி சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகர் அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் வேற்று மதத்தினர் செய்யும் அராஜக செயல் குறித்து நடவடிக்கை வேண்டி மனு அளித்துள்ளது. கடந்த 29.03.26 இரவு 8.00 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம் பிரியாள் ( தூத்துக்குடி சிவன் கோவில்) திருக்கோவிலின் பின்புறம் உள்ள பகுதியில் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் கோவிலை சுற்றி போட்டோ எடுத்து ரீல்ஸ் எடுத்து வந்தனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதைப் பார்த்து முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து வந்தனர் . கோவிலின் புனிதம் கெடும் அளவுக்கு நடந்து வருகின்றனர் இதை கோவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் காவலாளிகள் கவனிக்காமல் எங்கே சென்றனர். வேற்று மதத்தினரை வெளியேற்ற கோவில் நிர்வாக யாரும் அங்கு இல்லை. .வேற்று மதத்தினர் சார்ந்தவர்கள் கழுத்தில் அவர்களுடைய மத அடையாளத்தை வைத்து மற்றும் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.
இது போன்ற செயலால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு தாங்களே முழு பொறுப்பாவீர்கள். கோவில் சிசிடிவி கேமரா மூலம் பார்வையிட்டு அவர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இதுபோன்ற செயல் இனி மேலும் நடக்காத வகையில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பாகவும் இந்து முன்னணி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப சாவு
திங்கள் 30, மார்ச் 2026 4:57:41 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்
திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST)

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST)

தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST)

பூட்டிய வீட்டுக்குள் விவசாயி சடலம்: தற்கொலைக்குத் தூண்டியதாக கடிதம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:07:20 AM (IST)

நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி!
திங்கள் 30, மார்ச் 2026 9:00:27 AM (IST)








KumarMar 30, 2026 - 04:11:02 PM | Posted IP 104.2*****