» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறும் என இன்று (15.03.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலத்திட்ட நிகழ்வுகள் தேர்தல் முடியும் வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் வாராந்திர மனு விசாரணை கூட்டம், கிராமங்கள் தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், உங்களைத் தேடி உங்கள் ஊரில் அரசு அதிகாரிகளின் கள ஆய்வு மற்றும் குறைதீர்ப்புத் திட்டம், இந்தத் திட்டங்கள் அனைத்தும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவடையும் வரையில் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

சுதந்திர தின விழாவில் ரூ.10.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் விஷூ மகாஜன் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:04:55 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 80வது சுதந்திர தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடி ஏற்றினார்
சனி 15, ஆகஸ்ட் 2026 10:41:46 AM (IST)

தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)

சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:59:13 AM (IST)









