» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)
சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தலைமைக் காவலர் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின். இவர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று காலை, ரோஸ்லின் தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்குப் புறப்பட்டார்.
சாத்தான்குளம் கருமேணி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் வண்டி நிலைதடுமாறி கீழே விழுந்த ரோஸ்லின் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தலைமைக் காவலர் ரோஸ்லின் அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







