» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

விளாத்திகுளம் பகுதி விவசாயிகளின் பணத்தை மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விளாத்திகுளம் மற்றும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் 'விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி' தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் தங்களின் உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்ட சுமார் ரூ.1.5 கோடிக்கும் மேலான தொகை, நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த மோசடிக்கு நிறுவனத்தின் சி.இ.ஓஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர் அதில், "நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா, மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். விவசாயிகள் இழந்த பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் உழைப்பில் வந்த பணத்தை நம்பி முதலீடு செய்துவிட்டு, இப்போது ஏமாற்றப்பட்டு நிற்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)







